தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை!

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

எனினும் பாடசாலையின் அதிபர் அந்த சிபாரிசு கடிதத்தினை நிராகரித்துள்ளதோடு, பாடசாலை அனுமதியினையும் மறுத்து தான் கல்வி அமைச்சிக்கு கட்டுப்பட்டே பணியாற்றுவதாகவும், அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணியாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த குறித்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட அதிபரை தன் வீட்டுக்கு அழைத்துவந்து அவரை தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவமானது பல்வேறு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனித உரிமை ஆணைக்குழு இது தொடர்பான விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor