மாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம்

அரசியல் கட்சி ஒன்று ஆலயத்தில் வழிபாடாற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகவும் கூறி மாவிட்டபுரம் ஆலய குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று (11) குருக்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த காங்கேசன்துறைப் பொலிசார் முயன்று வருவகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் ஆலயத்துக்கும் குருக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு மறுப்பு வெளியிடுமாறு குறித்த குருக்கள் பத்திரிகை நிறுவனத்துக்கு சென்று மறுப்பு அறிக்கை கொடுத்த போது உன்னை 5 வருடத்துக்கு உள்ளே தள்ளுவோம் என குறித்த பத்திரிகையால் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இந்து மத அமைப்புக்கள் மெளனித்திருப்பதாக ஆலய மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor