கொக்காவில் பகுதி கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம் அல்வாய் வடக்குப் பகுதியை சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது – 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது -36), யாழ்ப்பாணம் மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது -19), யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது-19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பி.துவாரகன் என தெரியவந்துள்ளது. அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த கோரவிபத்து இடம்பெற்றது.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor