இலங்கையில் 5 இலட்சம் வேலைவாய்ப்புக்கள்!

நாட்டில் வெவ்வேறு துறைகளில் 5 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்நாட்டு தொழில் தேவை தொடர்பில் நடத்திய கணக்கெடுப்பின் போது வெவ்வேறு துறைகளில் 4 இலட்சத்து 97,302 வேலைவாய்யப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வேலைவாய்ப்புக்களில் தையல் இயந்திர ஊழியர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இரண்டாவதாக பாதுகாப்பு ஊழியர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயந்திர பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள், உதவி கணக்காளர்கள் மற்றும் தாதிகள் ஆகிய வேலைவாய்ப்புக்களும் அதிக அளவில் காணப்படுவதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்பொழுது தனியார் துறைகளில் 05 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காணப்படுவதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor