பளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அதாவது 08.01.2018 இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பளை நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையார் எஸ். சரேந்திரன் வயது 38 என்ற குடும்பஸ்தரே காயமடைந்தவராவார்.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமொன்றில் வேலை செய்யும் குறித்த நபர் தனது வேலையை முடிந்துவிட்டு வீடு சென்ற போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது அவரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதற்கமைய யாழ் போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிசிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் குறித்த வீதியால் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பற்றைக்குள் இருந்து தன்மீது சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor