தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆற்றலை பரீச்சிப்பதற்காக முதலாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாபெரும் விளையாட்டு போட்டியில் ஆகக்கூடிய வெற்றிகளை வட மாகாண அணி பெற்றுள்ளனர்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த விளையாட்டு போட்டி சமீபத்தில் திவலப்பிட்டிய தேசிய இளைஞர் படையணி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

கிரிக்கட் ,வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கபடி, உதைபந்தாட்டம் ,எல்லே உள்ளிட்ட 6 போட்டிகளை கொண்டதாக அமைந்தது.

இதன் போது வடமாகாண அணியில் ஆண்களின் பிரிவு கிரிக்கட் ,உதைப்பந்தாட்டத்திலும் பெண்களின் பிரிவு கரப்பந்தாட்டத்திலும் வெற்றிகளை பெற்றன. இதன்போது வடமாகணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் வெற்றிபெற்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor