வடக்கு முதலமைச்சர் ஒரு அரசியல்வாதியாக தோற்றுவிட்டார்: டிலான் பெரேரா

சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த மலேஷிய பிரதமரை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது, வடக்கை கட்டி எழுப்புவதற்கு உதவிகள் வழங்குவதாக மலேஷிய பிரதமர் உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே டிலான் பெரேரா மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, மலேஷிய பிரதமரின் ஆலோசனைகளை கேட்டாவது எதிர்வரும் காலங்களில் வடக்கு முதலமைச்சர் உரிய முறையில் செயற்பட்டு வடக்கை கட்டியெழுப்புவார் என்று எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor