முல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த குழுவினர் அங்கு முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தனர்

மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் முல்லைத்தீவில் மர்ம காய்ச்சல் காரணமாக சுமார் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் ஐவர் முல்லைத்தீவு வைத்தியசாலையிலும், நால்வர் யாழ் போதனா வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கையில், 80 போர் காச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது நோய் நிலை குறைந்தள்ளதாகவும் தெரிவித்தார்.

நோய் பரவுவதை தடுப்பதற்கு கூட்டமான இடங்களிற்குசெல்லதை தவிர்க்குமாறும் கைகளை வெளியிடங்களிற்கு சென்று வந்ததும் கழுவுதல் போன்ற நோய்த்தவிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor