உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றிற்கு மேல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டி ஒட்டப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டி அவற்றிற்கு மேல் ஒட்டப்படும் என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

அத்தோடு, பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றிற்காக தமது வாக்குகளை வழங்க வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, தேர்தல் காலத்தில் பாடசாலைகள் உள்ளிட்ட கட்டடங்களை திறந்துவைத்தால், இவற்றை நம்பி வாக்குகளை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு, அக்கட்டடங்கள் மீது சுவரொட்டிகளை ஒட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor