அளவெட்டியைச் சேர்ந்த பெண் கனடாவில் கொலை

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஜெயந்தி சீவரத்தினம் (வயது 46) என்ற குடும்பப் பெண் கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார் என ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மல வேர்ன் பகுதியில் அந்தப் பெண் உடலில் கடுமையான காயங்களுடன் மல்வேர்ன் வீதியில் காணப்பட்டுள்ளார்.

பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor