ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நிலையை கருத்திற்கொண்டு, இவர்களை சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரயுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஏற்கனவே இறுக்கமான கட்டத்தில் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் நிலையில், இச்சந்தர்ப்பத்தில் அனைத்து கட்சிகளும் மனிதநேயத்துடன் செயற்பட்டு தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் பேச்சுவார்த்தையொன்றிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor