மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்!! : நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா ஓமந்தை கல்லுப்போட்டகுளத்தில் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும்,அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், கர்ப்பமடைந்துள்ளமை உறுதியானது.

இதனையடுத்து ஓமந்தை பொலிஸார் குறித்த மாணவியிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தில், நொச்சிக்குளத்தை சேர்ந்த 50 வயது ஆசிரியரே இதற்கு காணம் என தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த சிறுமி துஸ்பிரயோகத்த்திற்கு உள்ளாக்கப்பட்டதனை கண்டித்தும் சிறுமிக்கு நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டதோடு பல்வேறு கோஷங்களையும் எழுப்பியதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதனையடுத்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் மகஜர் ஒன்றையும்; கையளித்ததுடன் தமது கோரிக்கை தொடர்பிலும் எடுத்தியம்பியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor