இராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது: முல்லைத்தீவில் இராணுவத் தளபதி!

தனிப்பட்ட நோக்கங்களுக்காக இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது இராணுவ வீரர்களின் கடமை எனவும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் இராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் இராணுவ வீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை போன்று ஒழுக்கத்தை பேணுவதுடன், பிரதேசத்திலுள்ள அனைத்து இன மக்களுடனும் சுமுகமான உறவுகளை வளர்ப்பதன் மூலம் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor