வடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு, பதவியுயர்வு , மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும் நோயாளர்களினதும், பொதுமக்களினதும் நன்மை கருதி அவசரசிகிச்கைக்கு பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor