காலியின் சில பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்!!!

காலியின் சிலபகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காலி, கிங்தொட்டை என்ற கிராம பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதுடன், இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், வீடுகள் சிலவற்றிற்கும் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்த விஷேட அதிரடிபடையினரும், அதிகளவிலான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவராயினும் போலியான பிரசாரங்களை முன்னெடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor