தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்

காலா­வ­தி­யான மருந்துப் பொருள்­கள், ஆயி­ரத்­துக்­கும் மேலான கண்­ணா­டிப் போத்­தல்­கள், பொலித்­தீன்­கள், ஊசி­வ­கை­கள் போன்ற மருத்­து­வக் கழி­வு­கள் கடந்த மூன்று நாள்­க­ளாக வட­ம­ராட்சி தொண்­ட­மா­னாறு கடற்­ப­ரப்­பில் கரை­யொ­துங்குகின்­றன. இவை ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­களா என்­கிற சந்­தே­கம் மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.

அந்­தப் பொருள்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்தே இங்கு வரு­கின்­றன என சுகா­தா­ரப் பிரி­வி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். பொருள்­க­ளில் உள்ள இந்­திய அரச முத்­தி­ரை­கள், அங்­குள்ள வர்த்­தக நிலை யங்­க­ளின் பெயர்­களை வைத்தே அவர்­கள் இவ்­வாறு சந்­தே­கிக்­கின்­ற­னர்.

கரை­யொ­துங்­கும் மருத்­து­வக் கழி­வு­கள் தொண்ட­மா­னாறு மீன­வர்­கள் மத்­தி­யி­லும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தி­யா­வின் மருத்­து­வக் கழி­வு­கள் பட­கு­க­ளில் எடுத்­து­வ­ரப்­பட்டு நடுக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­ற­னவா என்­கிற சந்­தே­கத்­தை­யும் இது கிளப்­பி­விட்டுள்­ளது.

‘கழி­வுப் பொருள்­கள் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கு­வ­தால் கடற்­ப­ரப்பை அண்­டிய பிர­தே­சங்­க­ளில் வாழும் மக்­கள் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். கடற்­கரை முழு­வ­துமே குப்­பை­மே­டா­கக் காணப்­ப­டு­கின்­றது. கடல் வளம் பாதிப்­ப­டை­கின்­றது. மீன் இனம் அழி­வ­டை­கின்­றது” என்­கின்­ற­னர் கடற்­றொ­ழி­லா­ளர்­கள். வட­ம­ராட்­சி­யின் ஏனைய கடற்­ப­ரப்­புக்­க­ளி­லும் இவ்­வா­றான கழி­வுப் பொருள்­கள் கரை­யொ­துங்­கு­கின்­றன. ஆயி­னும் இந்­தக் கடற்­க­ரை­யி­லேயே அதி­க­மா­கக் கரை­யொ­துங்­கு­கி­றது என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

‘இவ்­வாறு மருத்­து­வக் கழி­வு­கள் கரை­யொ­துங்­கு­வது குறித்­து ­இ­து­வரை எமக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் இது பற்றி ஆரா­யப்­ப­டும்’’ என வட­ம­ராட்சி நகர சபை அதி­காரி­ ஒரு­வர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor