யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை பகுதியில் ஒருவர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். பிரதான வீதியில் உள்ள சலவை தொழிலில் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இடத்தில் நின்ற நபர் மீதும், ஈச்சமோடாடை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் ஒரு இளைஞனை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.

இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகிய கலைச்செல்வன் , கவின்றோ ,அ.சுஜீவன் ,ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் மற்றும் காரணங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor