மீசாலை ரயில் விபத்தில் ஒருவர் பலி

யாழ். மீசாலை ரயில் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) பிற்பகல் 2 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டது.

மீசாலை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள புத்தூர் சந்திப் பகுதியில் உள்ள ரயில் கடவையை, மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட ஒருவரே, ரயிலில் மோதுண்டு உயிரிழந்து உள்ளார்.

இதில் உயிரிழந்தவர், சாரதியாகக் கடமையாற்றும், கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயுகன் (வயது 38) என்பவராவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டே, இவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor