இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகம் எக்காரணம் கொண்டும் சீனாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மாத்தறை ஒருங்கிணைப்பு அழுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் இதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறிளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்து உமையாற்றுகையில் அடுத்த வருடம் புதிய கல்வி நவோதய திட்டத்திற்கென 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளவிய ரீதியில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் தயாராகவுள்ளது

குடும்ப ஆட்சி மூலம் கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய கடன்பழுவை குறைப்பதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor