உயர்தர தொழில் கற்கை நெறிக்கு 2100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிக்காட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .

இதற்கான வர்தத்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை நெறிக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடத்திற்காக இலங்கை ஆசிரியர் சேவையில் 3 – 1 அ தரத்திற்கு பட்டதாரிகள் 2100 பேர் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் முழு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor