8:08 pm - Sunday February 18, 2018

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்து வரும் நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்குமென்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் அதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடி மின்னலிலிருந்து தம்மைப் பாதுகாக்க பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Filed in: செய்திகள், ஞாபகத்தில் வைக்க

Comments are closed.