மேல் நீதிமன்றத்துக்கு எழிலனின் ஆட்கொணர்வு மனு தொடர்பான அறிக்கை!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது.

இதில் எழிலன் உள்ளிட்ட ஜவர் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்துள்ள நிலையில் அதன் எழுத்து மூலமான அறிக்கை நீதிமன்றில் சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் அவர்களினால் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த கட்டமாக மீதி 7 பேரினதும் ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை எதிரவரும் ஜனவரி 2018 ஆம் ஆண்டு 4 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் பதில் நீதிபதி சுதர்சன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor