புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை!

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டை அரசதரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள், பிலியந்தல பேருந்து தரிப்பிடத்தில், நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: Editor