யாழ்ப்பாணத்தில் மேலும் 3 நாட்களுக்கு கடுமையான மழை தொடரும்!!! : வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் கடுமையான மழை பெய்வதனால் வீதிகள் அனைத்தும் வெள்ளம் நீரால் சூழ்ந்துள்ளன.

தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக கடுமையான மழை பெய்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் வளிமண்டல தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனாலேயே யாழ்ப்பாணத்தில் கடுமையான மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். அத்துடன் மேலும் மூன்று நாட்களுக்கு கடுமையான மழை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமான மழை வீழ்ச்சி தீவகப்பகுதியிலேயே பதிவாகியுள்ளதாகவும் எனினும் அங்குள்ள மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor