பெட்ரோல், டீசலின் விலையில் அதிரடி மாற்றம்!

கனியவள கூட்டுத்தாபனம் எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் , கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் பாதீட்டை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26ம் திகதி கனியவள கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது , கனியவள கூட்டுத்தாபனத்தின் ஓகஸ்ட் மாத இலாபம் 7 ஆயிரத்து 729 மில்லியன் ரூபாய் எனவும் செப்டம்பர் மாதத்தில் அந்த கூட்டுத்தாபனத்தின் இலாபம் 9 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாய் எனவும் ​தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றய தினம் இடம்பெற்ற பங்கு மதிப்பாய்வு குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே எதிர்வரும் தினத்தில் விசேடமாக டீசல் மற்றும் பெட்ரோலின் விலை குறிப்பிட்டளவில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor