யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முஸ்லிம் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கவனவீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

“2016ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு என மீள்குடியேற்ற அமைச்சால் 200 கல் வீடுகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. எனினும் இதுவரை 20 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மக்களுக்கு இறுக்கமான காரணங்களின் நிமித்தம் அதிகாரிகளால் வீட்டுத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor