யாழ் படையினரின் பங்களிப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றிணைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு திட்டம் நடைபெற்றது.

யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த நிகழ்வில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி 51ஆவது மற்றும் 515ஆவது படைப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தில் கிட்டத்தட்ட 150 மரக்கன்றுகள் யாழ் மேலதிக மாவட்ட செயலாளர் திரு .எஸ் .முரளிதரின் தலைமையில் பயிரிடப்பட்டது.

இராணுவத்தினர் மற்றும் பொது மக்களிற்கு தென்னை மரக்கன்றுகள் போன்றன பகிர்ந்தளிக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் கிட்டத் தட்ட 10,000 மரக் கன்றுகளை பயிரிடவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் ,யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா , லயன்ஸ் கழகத்தினரின் 306டீ2 தலைவியான திருமதி சியாமா டி சில்வா ,தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளடங்களான பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor