மூவாயிரத்து 626 பேருக்கு ஆசிரியர் நியமனம்

கல்வியற்கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த சுமார் மூவாயிரத்து 626 பேருக்கு புதிதாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இவ்ர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்தனர்.

இவ்வாறு புதிதாக நியமனம் பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை ஓரளவு நிவர்த்திக்கலாம் என கல்வியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor