முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனம்

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறைந்த முச்சக்கரவண்டியில் மூலம் ஏற்படும் விபத்துக்களால் வருடாந்த பல உயிர்கள் இல்லாமல் போவதுடன் பலர் அங்கவீனர்களாக ஆகுவதைத் தடுக்கும் நோக்கில் அதற்கு மாற்றீடாக இந்த நான்கு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டது போன்று ஒரு பரீச்சார்த்த திட்டமாக இதனை ஆரம்பிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்துடனான, பொருளாதார ரீதியில் இலாபகரமான இவ்வைகை வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சட்ட ரீதியான அனுமதி வழங்கும் செயற்பாடுகள் தற்பொழுது நடைபெற்றுவருவதாகவும், அடுத்த வருடம் அவற்றை இலங்கை பாதைகளில் செலுத்தமுடியும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor