தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்க உதயமாகியது வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு

இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் வகையில், வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பொன்று வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலை அடுத்து, குறித்த அமைப்பு உதயமாகியுள்ளது.

இவ் அமைப்பில் 17 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். மேலும் பல அமைப்புக்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவும், சம்பந்தப்பட்டோருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor