பிரபாகரனை கண்டு குற்ற உணர்ச்சியால் குறுகினோம்: ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை கடற்கரையில் கொல்லப்பட்டு கிடந்த காட்சியைக் கண்டு குற்ற உணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது தந்தையை கொன்றவர் என்றாலும், பிரபாகரனின் இழப்பு துக்கத்தை ஏற்படுத்தியதென்றும், தனது சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரபாகரனின் இளைய மகனின் இறுதிக்காலம் எவ்வாறு துன்பம் மிக்கதாக காணப்பட்டதோ, அதே போன்ற ஒரு நிலைமை தமக்கும் ஏற்பட்டிருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor