கைதிகளின் விடுலையை வலியுறுத்தி வடக்கில் வெள்ளிக்கிழமை பூரணஹர்த்தாலும் கண்டனப் போராட்டமும்

அனுரபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13-10-2017) அன்று வடமாகாணம்முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும் காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் அசுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும் இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017 வெள்ளிக்கிழமை காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆயிரமாய் அணிதிரள்வோம்.

வடபகுதியிலுள்ள பல பொது அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளன.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்ப்பாணபல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
இலங்கை ஆசிரியர் சங்கம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு
வடமாகாண புதிய அதிபர் சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம்
சமூக விஞ்ஞாக ஆய்வு மையம்
கிராமி உழைப்பாளர் சங்கம்
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு
தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம்
வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு
யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி
ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி
தமிழ் சிவில் சமூக அமையம்
தமிழ்ர் விடுதலைக் கூட்டணி
அகில இலங்கை சைவ மகா சபை

Recommended For You

About the Author: Editor