மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல அதிகாரி ஒருவர் நிதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்.

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவர்களில் 6 சிறுவர்கள் சிறுவர் இல்ல அதிகாரிகளின் அனுமதியின்றி இளநீர் பருகியமைக்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி சிறுவர் இல்ல அதிகாரிகளினால் மோசமாக தாக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இதனை நிராகரித்துவரும் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் சிறுவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்பாது சிறுவர்கள் காயமடைந்துள்ளதாவும் தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் ஒருவரின் தந்தையிடம் சிறுவர் இல்ல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அனுமதியின்றி இளநீர் பருகியமைக்காக தம்மீது சிறுவர் இல்ல நிர்வாகம் தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு விரைந்த சிறுவர் நன்னடத்தை பிரிவினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் தாக்கப்பட்ட சிறுவர்கள் 5 பேரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

இதற்கமைய இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல மேற்பார்வையாளர் நடராசா ரவிகரன் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய குறித்த மேற்பார்வையாளரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கந்தர் மடத்தைச் சேர்ந்த மற்றுமொரு சிறுவனை அவரது தந்தை நேற்று முன்தினம் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor