சயனைட் இன்றி அஞ்சா நெஞ்சோடு போராடிய தலைவர் பிரபாகரன்!

எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இறுதித் தருணத்தில் அவருடன் இருந்த ஏனைய உறுப்பினர்கள் சயனைட் அருந்தியே உயிரிழந்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் உடல் கைப்பற்றப்பட்ட பின்னர், அது அவருடைய உடல் தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டதென்றும், எனினும் அங்கு கிடைத்த பல சான்றுப் பொருட்களை வைத்து அவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும் கமால் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

போர்க் காலத்தில் வன்னி பாதுகாப்பு படைகளின் பிரதானியாகச் செயற்பட்ட கமால் குணரத்ன, பிரபாகரனை பற்றி பல கருத்துக்களை ஏற்கனவே தான் வெளியிட்டிருந்த ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். வீரத்தில் மாத்திரமன்றி ஒழுக்கத்திலும் அவர் சிறந்து விளங்கினார் என கமால் குணரத்ன தமது புத்தகத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor