நாவற்குழியுடன் புகையிரத சேவைகள் நிறுத்தம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் ஒரு வாரத்துக்கு நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கும்-நாவற்குழிக்கும் இடையிலான புகையிரத பாதையில் உள்ள நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத நிலையத்துடன் மட்டப்படுத்தப்படவுள்ளது.

இந்த புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

இப்புனரமைப்பு பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் விசேட பேருந்துகள் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து புகையிரதங்கள் ஊடாக அவர்களது பயணத்தை தொடர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் யாழ்.புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கும் ரயில் மூலம் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையான புகையிரத சேவைகள் வழமையான கால அட்டவணைக்கு ஏற்ப நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தகவல்களை பெற விரும்புவோர் 021-2222271 என்ற யாழ்.புகையிரத நிலைய தொலைபேசி இலக்கத்துடன் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor