கருணா தலைமையில் கிழக்கில் களமிறங்குகிறது மஹிந்த அணி!

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மஹிந்த அணி, அடுத்ததாக கிழக்கில் கருணா அம்மான் தலைமையில் களமிறங்கவுள்ளது.

மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ தலைமையில், கடந்த மூன்று நாட்களாக வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மஹிந்த ஆட்சியில் பிரதியமைச்சராக செயற்பட்ட கருணா அம்மானின் துணையுடன் அடுத்த மாதம் கிழக்கில் மஹிந்த அணி தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போருக்குப் பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் கொண்டுள்ள விரக்தி காரணமாக, தமிழ் மக்களின் வாக்குகள் கடந்த தேர்தலில் மஹிந்த அணிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், வடக்கு கிழக்கில் பலமாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை தகர்த்து தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முனைப்பில் மஹிந்த அணி தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: Editor