இன்று முதல் 65 ரூபாவுக்கு தேங்காய் விநியோகம்: அரசாங்கம் நடவடிக்கை

அரச தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய்களை இன்று முதல் (02) 65 ரூபா சில்லறை விலைக்கு சந்தைப்படுத்த தெங்கு உற்பத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறியளவிலான தெங்கு உற்பத்தியாளர்களினது தேங்காய்களும் இவ்வாறு குறைந்த விலையில் சந்தைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை, நகர்ப் பகுதிகளிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள ச.தொ.ச. விற்பனை நிலைங்களிலும் இக்கட்டுப்பாட்டு விலையில் தேங்காயைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சபை அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: editor