அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை!

43வது தேசிய விளையாட்டு விழா மாத்தறை – கொடவில மைதானத்தில் நேற்யை தினம் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஆகியோர் தரலமையில் ஆரம்பமானது.

விழாவில் முதல் நாள் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனையை நிலைநாட்டினார்.

வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் தேசிய ரீதியாக ஏற்படுத்திய தனது சாதனையை மீண்டும் புதுப்பித்து இந்த சாதனையை நிலைநாட்டினார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாதனை படைத்துவரும் அனித்தா நேற்றைய போட்டியில் 3.48 மீற்றர் உயரத்தில் பாய்ந்து தனது சாதளையை புதுப்பித்துள்ளார்.

அனித்தா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை சாதனையை மீண்டும் புதுப்பித்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Recommended For You

About the Author: Editor