குண்டர் சட்டம் இரத்தானது : விடுதலை ஆகிறார் திருமுருகன் காந்தி

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த நிகழ்வுக்கு அனுமதித்துவந்த தமிழக அரசு திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்தது. நிகழ்வில் பங்கேற்றவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

அரசின் நடவடிக்கையை எதிர்த்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது.

Recommended For You

About the Author: Editor