சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்

இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம் இலங்கரட்ணம் சஜித் என்ற இளைஞரே இந்தியா சிதரம்பத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

22 தொடக்கம் 28 வயது பிரிவுப் போட்டியில் இந்தியா உட்பட பல நாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டே சஜித் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஹிடின் ஜடியல் அமைப்பானது ஆறாவது தடவையாக ஹிடின் ஜடியல் 2017 நிகழ்வை இந்தியா சிதரம்பத்தில் கடந்த மாதம் நடத்தியிருந்தது.

இதேவேளை இவரது சகோதரி இலங்கரட்ணம் சுசானி என்பவா் 16-21 வயது பிரிவு போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor