கிளிநொச்சி பொதுச்சந்தை துர்நாற்றம் : பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சி பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள், அங்கு வருகைதரும் ஆயிரக்கணக்காண பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் சுகாதார சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும், துர்நாற்றத்திலிருந்து பொது சந்தை விடுபடவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தொற்று நோய்களிற்கும், சுவாச நோய்களிற்கும் மக்கள் ஆளாகும் முன்னர், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்வதற்கு பா ம உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor