அரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது! : சம்பந்தன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்குள் அரச சேவையில் ஈடுபட்டிருக்க முடியாதென உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ஒன்றிணைந்த எதிரணி சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, திருத்தத்ததை ஏற்காவிட்டால் எதிராக வாக்களிப்போம் என தினேஸ் மற்றும் விமல் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர். இதன்போது குறுக்கிட்டு உரையாற்றியபோதே, சம்பந்தன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கு இவ்வாறான நிபந்தனை விதிக்கப்படுவது அவர்களது உரிமையை பறிக்கும் வகையில் அமையுமென குறிப்பிட்ட சம்பந்தன், அரச சேவை வகிக்கும் காலத்தில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor