கிளிநொச்சியில் உதயமானது மலையக மக்கள் ஒன்றியம்

வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் கிளிநொச்சி கிளை, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜ் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு கிழக்கில் உள்ள மலையக சமூகத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கம் என ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த காலங்களில் மலையக மக்களை விமர்சித்து எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரை தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் புலம்பெயர் தேசத்திலுள்ள ஒருவர் மலையக மக்கள் தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தமை தொடர்பிலும் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், மலையக மக்களது உரிமைகள் தொடர்பாக இவ் அமைப்பு செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் என ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: Editor