கிளிநொச்சியில் மழை வேண்டி யாகபூஜையும் 1008 இளநீரில் அபிசேகமும்

கிளிநொச்சியில் மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது.

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் கூட, மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டமும் குறைந்து செல்வதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து கொண்டுள்ளது.

இதனால் மழை வேண்டி இவ் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் கிளிநொச்சி விவசாயிகாளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழை இன்மையால் கிளிநொச்சியில் சில கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிய நிலையில் குடிநீருக்கு கூட தட்டுப்பாடான நிலை உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor