வடக்கு விவ­சாய அபி­வி­ருத்­திக்கு 135 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு

வடக்கு மாகாண விவ­சாய அபி­வி­ருத்­திக்கு “மாகா­ணத்­துக்­கான குறித்து ஒதுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­மூ­லம் 135 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிதி யாழ்ப்­பா­ணம் மன்­னார் வவு­னியா, முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்­கும் பகிரப்படும்.

அந்த நிதியில் 18 வகை­யான விவ­சாய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொ­ரு­மா­வட்­டத்­தி­லும் 18 வகை­யான வேலைத்­திட்­டங்­க­ளும் மேற்­கொள்­ளப்­படும் என வடக்கு மாகாண விவ­சாய பணிப்­பா­ளர் எஸ்.சிவகுமார் தெரி­வித்­தார். அவர் தெரிவித்ததாவது,

விவ­சாய அபி­வி­ருத்­தியை கருத்­தில் கொண்டு மேற்­கொள்­ளப்­ப­டும் 18 வகை­யான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளில் சில 50 வீத மானிய உத­வி­யு­டன் கூடி­ய­தா­க­வும் சில நூறு வீத­மும் மானிய உத­வி­யு­டன் கூடி­ய­தாக மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. விவ­சாய அபி­வி­ருத்தி வேலைத் திட்­டத்­துக்கு தேவை­யான பய­னாளி தெரி­வு­கள் பெரும் பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பான விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர்­கள் மற்­றும் மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ ளத்­தி­னால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

18 வகை­யான விவ­சாய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளில் நெல் உற்­பத்தி அபி­வி­ருத்தி உவர் நில நெற்­ப­யிர்ச்­செய்கை பப்­பாசி தேசி பயிர்ச்­செய்கை தேனீ­வ­ளர்ப்பு காளான் உற்­பத்தி பழப்­ப­யிர் உற்­பத்தி உண்மை வெங்­காய விதை உற்­பத்தி வள­வி­யல் பயிர்ச்­செய்கை உள்­ளிட்ட பதி­னெட்டு வகை­யான அபி­வி­ருத்­தி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்­றார்.

Recommended For You

About the Author: Editor