இலங்கையில் உயிழந்தவர்களுக்காக இராமேசுவரம் கடற்கரையில் அஞ்சலி

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு பங்கேற்ற போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பாக இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் திதி கொடுக்கப்பட்டது. இதில் திரளான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர் என, தி ஹிந்து ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Recommended For You

About the Author: Editor