உலகிலேயே உயரமான நத்தார் மரம் இன்று இரவு திறந்து வைப்பு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரம் இன்று(24) இரவு 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கிறிஸ்மஸ் மரமானது 325 அடி (100M) உயரமுடையதாக அமைக்கப்பட்டு, உலகிலேயே மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட 221 அடி உயரம் கொண்ட நத்தார் மரமே, உலகில் மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor