கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இலங்கை பாதைப்படம்!

கூகுள் வரைப்படத்தில் (Google Maps) இப்போது இலங்கை பாதை படம்(Street view) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.

palay-road

கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம் (Google Maps) தெரிவிக்கிறது.

கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களைக் அணுக முடியும், அல்லது வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் “pegman” Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.

இந்த முகவரியில் நுழைந்து இலங்கையின் பாதைப்படத்தின் ஆச்சரியத்தை அனுபவியுங்கள்- http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

Recommended For You

About the Author: Editor